Sunday, March 28, 2010

அந்திவானம்


மரிக்கும் பொழுதும்
எரிக்கும் தனலாய்
அந்தி வானம்.

**************

பிரியும் பொழுதும்
வெட்கம் குறையாத
அஸ்தமன சூரியன்.

**************

அந்திப் பொழுது
அஸ்தமன சூரியன்
அருகில் அப்பா.

No comments:

Post a Comment